பார்வை மறைந்தால் - இராஜ்குமார்
பார்வை மறைந்தால்
====================
அழகிய காட்சி வந்தாலும்
விழிகள் முழுதும் வெறுக்குது
அழுகை துரத்தி நின்றாலும்
மனதை பறித்து பார்க்குது
பிரிவு நொடியில் வாழ்ந்தாலும்
பரிவு கண்ணில் இறக்குது
கவலை கனமாய் இருந்தாலும்
ஏக்கம் எங்கோ நிறையுது
உன்பார்வை கண்முன் மறைந்தாலும்
உணர்வும் உடைந்து உலவுது
- இராஜ்குமார்