காதல் கல்யாணம்

உனைகண்டு நாணத்தால்
ஓடி ஒளிகிறது தினம் நிலவு !

மலையரசி நீராட
மறைந்து பார்க்கும் ஆதவனோ
கருமேக கூட்டதில் ...
உன் மேனி ஏக்கத்தில் ...
அருவி நீரை பருகியும்
தீரவில்லை அவன் தாகம் !!

தென்றல் வந்து தூது சொல்ல
சிறு சாரல் வந்து மேனி தழுவ
அவன் முகம் கண்டு நீ மலர
அவனியெங்கும் பசுமை கொள்ள
இயற்க்கை காதலென்று
இயம்புகிறாய் வையகத்துள்

உயர் நெற்றி உச்சு முகர்ந்து
உன்பாதம் வரை படர்ந்து
பருவ காலங்கள் மாற்றம் போல்
பாவை உந்தன் நிலையுமென
உணர்ந்து பார்க்கும் தருணமிது

அரவணைப்பை தவிர்த்து பின்
தகதகப்பில் வெந்து என் பயன் ?
நொடி பொழுது சலனத்தில்
தொலையும் வாழும் வாழ்வுந்தான்
உணர்ச்சிப் பெருக்கில் எடுக்கும் முடிவு
உயிரைக் குடிக்கும் நீ அறிவாயோ ?

பெற்றெடுத்த உறவையெல்லாம்
வெறுத்துதொதுக்கும் காதல் வந்தால்
வெற்றிவாகை சூடிக் கொள்ள
நெற்றித் திலகம் வைப்பதுபோல்
மனதுள் தோன்றும் எண்ணங்களை
மறைக்காது உரைக்க வேண்டும் தாயிடம்

அனுபவங்கள் அவ்வபோது கசக்கும்
ஆனாலும் அதுவே உண்மை உணர்த்தும்
திருமணம் சடங்கு அல்ல
இரு மனங்கள் இணைக்கும் முயற்சி
காதல் செய்து மணம் புரிய காத்திருப்பதை விட
மணம்புரிந்து காதலிப்பதுவே வாழ்கையின் பாதுகாப்பு !!

எழுதியவர் : கனகரத்தினம் (17-Sep-14, 10:43 pm)
Tanglish : kaadhal kalyaanam
பார்வை : 101

மேலே