மின்னல் விழிப்பெண்ணே

அந்த நீல வானத்து
நிலவின் வெண்மை ஒளியில் !
நித்தம் நம்மை மறந்து
காதல் பித்தம் கொள்ளலாமா !

உன் மடியின் மீது
என் முகத்தடம் பதித்து !
நெஞ்சத்தின் நிலை மறந்து
கொஞ்சம் உறக்கம் கொள்ளவேண்டும் !

உன் சிறு புன்னகையில்
அந்த வானத்து விண்மீன்கள் !
உன்காதல் வலையில் சிக்கிட
உன்முன்னே மண்டியிட்டு கெஞ்சுதே !

என் இதயத்துடிப்பின் ஓசை
உன் விழியைக் கண்டவுடன் !
புதிய இசையாய் உருவெடுத்து
என்னை உன்னில் வசப்படுத்தியதே !

வானவில்லும் பார்த்து கெஞ்சும்
வர்ணனை இல்லா அழகே !
வாய்ப்பு வேண்டி காத்துக்கிடக்கிறேன்
மின்னல் விழியழகே உனைப்பாட !

எழுதியவர் : நா.அன்பரசன் (18-Sep-14, 11:27 am)
பார்வை : 98

மேலே