இனிக்கும் இயற்கை-------நிஷா

உரசுகின்ற சூரியனின்
உஷ்ணத்தால்
உடைந்து அழும்
மேகங்கள்.......
"மழைத்துளிகள்"
-------------------------------------வான்முட்டும்
வண்ணத்தூரிகை கொண்டு
இயற்கை
வரைந்த ஓவியம்......
"வானவில்"
-------------------------------------குளிர்கின்ற இரவில்
குதூகலிக்கும்
குட்டி மலர்கள்.....
"நட்சத்திரங்கள்"
------------------------------------
ஒற்றை ஒளியில்
உள்ளம் கவரும்
வெள்ளைத் தாமரை.....
"நிலா"...
-------------------------------------

எழுதியவர் : நிஷா (18-Sep-14, 12:35 pm)
Tanglish : inikkum iyarkai
பார்வை : 263

மேலே