வாழ்க்கை அழகி

இறைவன் படைப்பில்
இறுதி வடிவமாய் நீ
பூக்களெல்லாம் சேர்ந்து
ஊஞ்சலாடும் நூல்கயிறுதான்
உன் புடவை .....
எளிமையை அலங்கரித்துக்கொள்கிறாய்
எதனை விடவும்
மிக அழகாக......!!!
ஆதாம் ஏவாளுக்கு முன்
நீ பிறந்திருக்க வேண்டும்
அதிசயங்களின் அகராதி என
அறியப்பட்டிருப்பாய்
அகிலத்தின் ஆயுட்காலத்தில் ..!
உன்னோடு இருக்கும் நாளே
நான் உயிரோடிருக்கும் நாளாக
கணக்கிடப்படுகிறது
காதல்தேவன் கணக்கேட்டில்..!!
உன்னோடு வாழ்வதற்க்காகவேனும்
சாவோடு போராடலாம்
கவிதாயினி நிலாபாரதி