நாணயம் செய்யும் நாடகம் - இராஜ்குமார்

நாணயம் செய்யும் நாடகம்
=========================

நான் என் செய்வேன்....

பலமுறை எறிந்தாலும்
உன் முகத்தை காட்டுது

எத்தனை முறை சுற்றினாலும்
உன் உருவத்தை உள்வாங்குது

ஒரே முறை சுண்டினாலும்
உன் சிணுங்களை சிதறுது

கைப் பையில் கடத்தினாலும்
உன் கைகளாய் கனக்குது

புத்தகத்தோடு புதைத்தாலும்
உன் கனவாய் கதைக்குது

வெக்கத்தோடு முறைத்தாலும்
உன் கண்ணாய் சிமிட்டுது

அலைபேசியில் அமுக்கினாலும்
உன் வெறுப்பாய் வெளியேறுது

தங்கையிடம் கொடுத்தாலும்
உன் குதூகலமாய் குழம்புது

ஆதலால்
உன்னிடமே கொடுக்கிறேன் ....
இருந்தும்...ஏன் ...

என் காதலாய் மாறுது ..

நான் என் செய்வேன் ..

நாணயம் செய்யும் நாடகத்தில்
நான் இருந்தது பிழையா ?

- இராஜ்குமார்

நாள் : 11 - 6 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (18-Sep-14, 5:54 pm)
பார்வை : 113

மேலே