காத்திருப்பு
கூட கிடந்த நாளு எல்லாம்
கடுக போல சிறுக்க
தூர இருக்கும் நாளு எல்லாம்
கடல போல பெருக்க
காஞ்சி போன பணமரமா
நெஞ்சி வாடி கிடக்க
உள்ள போகும்
சோறு கூட உள்ளுக்குள்ள சேரலயே
உள்ள வைச்ச உன் நினைப்பு
கூடிக்கிடக்கு உன்ன மட்டும் காணலயே
வசந்த கால பறவ போல
வருஷம் ஒரு முறை வருகிறவ
நானோ
திருநா வரும் காலம் பாத்து
வருஷம் முலுசும் கிடக்குறவன்
காலம் நெருங்கி போச்சு புள்ள
உன்ன காண நெஞ்சு தவிக்கு புள்ள
என்னை கொண்டு போனவளே
என்ன கொண்டு வருவ புள்ள