மறந்துவிடுகிறேன் உன் சிரிப்பில்...
வீட்டு வேலைகளையும் செய்து விட்டு
வேலைக்கும் சென்று கொண்டு
வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின்
பேச்சுக்கும் ஆளாகி நிற்கிறேன்
மனதில் வலியோடு...
ஆனால் அந்த வலி கூட
மறந்து விடுகிறது...
உன் கள்ளமில்லா
சிரிப்பை பார்க்கும்போது...