கிராமத்தின் மேன்மை

கட கடவென
கட்டை வண்டி
வருகின்றது
கணபதியின்
வீட்டுப் பக்கத்துப்
பாதையிலே...!!!

பட படப்புடன்
ஓடுகின்றாள்
கனகம்மா
தெருவின் ஓரம்...!!!

அடடே அடடே
வருகின்றது
வண்டியடா
கட்டுங்கடா
நெல்லு மூட்டையடா
உரக்கக் கத்துகிறாள்
பொன்னம்மா...!!!

கடுப்பான கணக்குப்
பிள்ளை வருகின்றான்
கணக்கு காட்ட
வேண்டுமெடா எடுடா
காகிதத்தை மகனை
விரட்டுகிறார் சுப்பையா..!!!

லொள் லொள்
என்று குலைக்கும்
நாயை அடி புடி
என்று விரட்டுகிறாள்
மூக்கம்மா பாட்டி...!!!!

கொட்டிய நெல்லைக்
கொத்தும் கோழியை
நோட்டமிடுகின்றான்
திருட்டு ராமலிங்கம்...!!!

சோவெனக் காற்று
வீசவே வேம்பு இலை
கொட்டி வாழ்த்துகின்றது
தெருவெங்கும்....!!!!!

ஓவ் ஓவ் என
நிறுத்துகின்றான்
வண்டியோட்டி வீராசாமி
வீட்டுக்குள்ளே இருந்து
நடுங்குகின்றான்
பொய்க் கணக்குப்
போட்ட ராமலிங்கம்
மகன்...!!!

இத்தனையையும்
வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருக்கிறாள்
கிராமத்து வாழ்க்கையைப்
படம் பிடித்து பத்திரிக்கையில்
போட வந்த பட்டணத்து
பாமா...!!!

ஆச்சரியம் பாதி
அதிசயம் மீதி
இன்று அறிமுகமான
செய்தி அவளுக்கு...!!!

தான் உண்டு தன் வேலை
உண்டு வீட்டில் வந்தால்
கதவு பூட்டு தெருவில்
சென்றால் வாகனம்
இந்த வாழ்க்கையும்
எதுவும் ஒளிவு மறைவு
இன்றி தெருவிலே உறவுகள்
உரையாடுவதைப் பார்த்து
வியப்புடனே விடைபெற்றாள்...!!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (19-Sep-14, 12:35 pm)
பார்வை : 79

மேலே