வைரமுத்து கவிதை போட்டியில் - என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி
(பிரபல FM வைரமுத்து தலைமையில் கவிதை போட்டி நடந்தது அதில் பங்கு பெற்ற எனது கவிதை)
ஜாதி சாக்கடையில் முகம் புதைத்து கிடக்கிறான் ஒரு முரடன்
புயல் கொண்டு வருவேன்
நாகரிகத்தில் முழுகி மூச்சி திணறுகிறது கலாச்சாரம்
தெளிந்த குளமாகி நிற்பேன்
கட்சி தாவலில் வேட்டியில் கறை
காட்டாறு வெள்ளமா வருவேன்
பட்டணத்து சிறுவன் விட்ட கப்பல் ஓன்று
கறை தட்டி நிற்கிறது ஓட்டை வாளியில் கரையேற்றவே நான்
காதல் ஓன்று கரை தட்டி நிற்கிறது
காதலன் வருமுனே தூதுவனாக நானே
வயிறு ஒட்டி உழுது உயிர் ஒட்டி கிடக்கிறான் உழவன்
நீண்ட இரவில் நிசப்தமாக வருவேன்
விதைத்த விதை உறங்கி இருக்க
விதைத்தவன் விழித்திருக்க
விரைவில் நான் .....!