உனக்கு சொந்தமான இதயம் எனக்கு வேண்டுமடி 555

என்னவளே...

நான் கொடுத்த கடிதங்களை
நீ கிழித்தெறிந்தாய்...

உன் கை பட்டதென்று
தினம் சேகரிக்கிறேன்...

உன் கூந்தலில் இருந்து விழுந்த
பூக்களையும் சேகரிக்கிறேன்...

நாளை என் கல்லறைக்கு
வேண்டுமென்று...

உன் நினைவுகளை
சேகரிக்கிறேன்...

என் இதய கூட்டில்...

என் உறக்கத்தில் உன்
கனவுகளையும் சேகரிக்கிறேன்...

உன் விருப்பங்களை
உன் தோழிடம் கேட்டு...

உனக்கு பிடித்த எல்லாம்
சேகரிக்கிறேன்...

என் மீது நீ காட்டும்
வெறுப்புகளையும் சேகரிக்கிறேன்...

என் வேதனையில்
சொந்தமாக...

எனக்கு சொந்தமான
எல்லாவற்றையும் சேகரித்துவிட்டேன்...

உன் இதயத்தை தவிர...

உனக்கு சொந்தமான இதயம்
எனக்கு சொந்தமாக வேண்டுமடி...

காத்திருக்கிறேன் எல்லாம்
சேகரித்த வண்ணம்...

காதலுடன் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Sep-14, 4:14 pm)
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே