உனக்கு எழுதும் கவிதைகள்

[பகுதி 9 ]
எழுதப்படாத கவிதை !
*********************************
வள்ளுவன் இளங்கோ கம்பன் பாரதி என்ற
நம் கவி வேந்தர்கள் பாடாதவை
எதுவென்று தேடினால்
எதுவும இல்லைதான்
என்றாலும்
நல்லவேளையாக
நம் காலத்தில் அவர்கள் இல்லை
இருந்திருந்தால்
புதுமையாக நான் எழுத
எதுவும் இருந்திருக்காது

அன்பே
நீ எனக்குப் புதுமைதானே !
[29]
*********

உன் வீட்டு மரக்கிளையில்
கூவிக் கொண்டிருக்கும்
குயிலின் குரலில் இருந்த சோகத்தை
உணர்ந்து கொண்ட நீ
உன் தோழிகளிடம் சொல்லி
பரிதாபத்துடன்
கவலையை பரிமாறிக் கொள்கிறாய்

ஆனால்.,
எனது கவிதையில் இழையோடும்
சோகங்கள் மட்டும்
உனக்குப் புரிவதே இல்லையா?

அல்லது
“அதை ரசிக்கிறாயா?”

[30]
**********
கவிதைகள் தொடரும்..........

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (19-Sep-14, 4:06 pm)
பார்வை : 166

மேலே