காதலின் வேதனை
ஆசவச்ச நெஞ்சிலிப்போ
அக்கினி எரியுதடி...
நேசம்வச்ச பாவத்துக்கு
நெஞ்சமும் நோகுதடி...
காற்றில்வர கானமெல்லாம்
உன்குரலா கேக்குதடி...
காதலிச்ச காலமிப்போ
கண்ணீரில் கரையுதடி...
பொத்திவச்ச உன் நெனப்பு
பொத்துக்கிட்டு ஊத்துதடி...
உன்.,நெத்திவச்சப்பொட்டு
இப்போ...நித்திரையில்
தோன்றுதடி...!
உள்ளத்தில் ஒன்னுமில்ல...
உன்னய தாண்டிபுள்ள...!