நல்லவன்
நல்லவனாய் இருப்பதை விட நடிப்பது கடினம்
நாளும் பொழுதும் மாறும் மனதால்
மனிதனில் பாதி மிருகமாய் வாழ்க்கை
வாய்ப்புகள் தேடும் வசதியின் வாழ்வில்
பிணத்தையும் பணமாய் எண்ணுகிறோம்
வாழ்ந்த காலத்தின் மீந்த பாவங்கள்
பலியாய் உறுத்தும் நோயாய் துரத்தும்
அறத்தின் வழியோ!
அறிவின் வழியோ!
ஆணவம் வேண்டா!
பாவ பலி சேர்க்கும்!
நிம்மதியின் நிலை தகர்க்கும்!!!!