தமிழ்புலி

தமிழனை தமிழனாய் தமிழுக்கு உரியனாய்
தெளிவினை தனியனாய் தெளிந்திடும் துரிதனாய்
களிப்பினை களியனாய் களித்திடும் அரியனாய்
விழிப்பினை விழியினால் விளித்திடும் வலியனாய்
மனிதனை மனிதனாய் மதித்திடும் மதியனாய்

வளர்ந்திட வழிவகை வகையுடன் வழங்கவே
புலர்ந்திட புதியவை புகையுடன் கொளுந்துமே
துளிர்விட துடித்திடும் மனமுமே வருகவே
தளர்ந்திட தகுதியும் தினமுமே பெருகவே

தெருவெலாம் தினையுடன் தேனுமே வளியவே
கருவிலே வனைந்திட மனுநிதி திரும்பவே
உருமிடும் புலியென புயலுடன் வருகவே
உருவிலா கலியுகம் கடன் படும் மருகவே

எழுதியவர் : பிரியா (20-Sep-14, 3:24 pm)
சேர்த்தது : பிரியா
பார்வை : 235

மேலே