உன்னுடன் வாழ காத்திருகிறேனடி நான் 555

பிரியமானவளே...

உன்னையே தினம்
தொடர்ந்து...

உன்னையே தினம்
நினைத்து...

சொல்ல நினைத்த
போதெல்லாம்...

தயங்கி தயங்கி
உன்னிடம் சொன்னேன்...

என் காதலை...

பல நாள் உன் பதிலுக்காக
காத்திருந்து...

பல பொழுதுகள் உன்
வருகைக்காகக் காத்திருந்து...

தினம் தினம் உன்
அன்புக்கு காத்திருந்து...

பல இரவுகள் உன் அரவனைப்பிற்காக
காத்திருந்து...

ஏங்குகிறேனடி நான்
தினம் தினம்...

நான் வாழும் நாள் வரை
உன்னுடன் சேர்ந்து வாழ...

உனக்காக
காத்திருகிறேனடி நான்...

வயிற்றில் பத்து மாதம்
சுமந்தவளை அன்னை என்கிறாய்...

இத்தனை வருடங்களாக
என் நெஞ்சில் நித்தம் சுமக்கிறேனே...

என்னை என்னவென்று
சொல்வாய்...

காத்திருகிறேனடி
உன்னோடு நான் வாழ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Sep-14, 4:05 pm)
பார்வை : 546

மேலே