இது காதலோ - இராஜ்குமார்

இது காதலோ ?
==============

இறக்க இறக்க
இதயம் துடித்தால்
இன்னொரு பெயர் காதலோ ?

வான்வெளி செல்லும்
பயண பாதையில்
பரவச நிலையில்
வண்ணம் வரைவது காதலோ ?

நீண்டு படுக்கும்
கவலை கரையை
நுரையால் நிரப்பும்
ஈர அலைகள் காதலோ ?

நேரம் குடித்து
தனிமை படிக்கும்
இனிமை நிறைக்கும்
இரசனை நொடிகள் காதலோ ?

அறியா பெண்ணை
தெரியா உணர்வை
புரியா புலம்பலை
கனவில் விதைப்பது காதலோ ?

- இராஜ்குமார்

நாள் : 5 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (21-Sep-14, 9:07 pm)
பார்வை : 95

மேலே