குறையுள்ள மனிதர்கள்

..."" குறையுள்ள மனிதர்கள் ""...
பொன்னோடு பொருளும்
கொடுத்து உன்னோடு
அழைப்பதை விடுத்து
பெண்ணோடு எல்லாமும்
கேட்பதேன்.... உன்னோடிருந்த
மனிதம் மண்ணோடா,
அல்லது அதையும்
கடந்து வான் விண்ணோடா ...?
நீயே கேட்டுப்பார் உனை
மனிதன் தானா .... விலைபேசிடும்
அடிமை சந்தையில் உனையே
நீ விற்பதுமேனோ, மாடாய் நீ
பிறந்திருந்தாலும் மரியாதை ...
மனிதனாய் பிறந்தே பாவியானாய் ..
அன்னை சொல் கேட்டிரா நீ
சீரழிக்கும் சீரோடு பேர்போக்கும்
ஆடம்பர சுகங்கள் கிடைத்திட
அனுசரிக்கும் பிள்ளையானாய்
அவமானம் கொல்லவில்லையா,?
தன் உடல் விற்கும் தாசியும்
சிறந்தவளே.. உயிர்ப்பிணம்
உந்தன் முன்னால்.. பூமியிலே
நீ பிறவாதே இருந்திருக்கலாம்,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...