சின்னச் சின்னதாய்

ஒளியின் வேகம் மந்தமானது -
உனைத்தேடுமேன் விழி முன்னே ..!

மழை தூறுமொரு பனியிரவில்
மொட்டைமாடியில் ...
நம் மௌனங்கள் வழக்காடும் -
-----------------------............................

மார்கழிக் குளிருக்கு
பனிதான் போர்வையோ ?!
மருதமலைக்கு..!

--------------------------------------------

பல்லியின் நா ஈரம்
எடை தூக்கும் எறும்பு
சிலந்திவலையின் நேர்த்தி
தூக்கணங் குருவிக்கூடு..-
சிவில் இன்ஜினியரிங்
சிலபஸில் இல்லை?

எழுதியவர் : நிலாநேசி (22-Sep-14, 12:16 pm)
பார்வை : 67

மேலே