நான்

வியக்கிறேன்..
குறை பல இருப்பினும்
குணத்தை கொள்ளும் மாந்தர் தம்
நிறை மனம் காண்கையில்
வியக்கிறேன்!
துடிக்கிறேன் ..
துயர் உறும் மாந்தர்க்கு
துடைத்துதவும் நிலை அற்று போகையில்
துடிக்கிறேன்!
படிக்கிறேன்..
அனு தினமும் எனை வளர்க்கும்
அன்பு மனங்கள் தரும் அறிவுரைகளை
படிக்கிறேன் !
வாழ்கிறேன்..
இன்று வரை அவள் நினைவு
தரும் சுகத்தில்
வாழ்கிறேன்!