இரண்டாவது வருகை----புதுக்கவிதை
அவர்களுக்காகத்தான்
அவர் இறந்தார்!
அவர்
ஆணிகளால்
அடிக்கப்படவில்லை;
ஆயிரம் சல்லடைகளாய்த்
துளைக்கப்பட்டுக் கிடந்தார்.
முள்களுக்கிடையில்
வாய்க்காலாக
அவரது இரத்தம்
ஓடிக்கொண்டிருந்தது.
சுள்ளிகளாகச் சுற்றிலும்
அவரது பிள்ளைகள் .
தள்ளிவைக்கப் பட்டது
அவர்களின் கனவுகளா..
இல்லை..சொர்க்கமா..?
அவர்கள் காத்திருக்கிறார்கள்
அவரது
இரண்டாம் வருகைக்காக..!
== ++ ==