பொறாமை

பொறாமை!
‘இயலாமை’ என்ற ஆமைக்குப் பிறந்தவன்தான்
இந்தப் பொறாமையென்ற கொடியவன்...
எப்படி?
இயலாமைதானே பொறாமையின் பிறப்பிடம்...
பொறாமையின் ஜனனம்
இயலாமையுடையவனுக்கு மரணம்...
பொறாமை...
இதில் ‘ஆமை’ என்றிருப்பதாலோ என்னவோ...
ஆமையைப்போலவே
இது மெல்ல மெல்லக் கொல்கிறது...

எழுதியவர் : கவிச்சிற்பி (23-Sep-14, 12:54 pm)
பார்வை : 184

மேலே