kavisirpi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kavisirpi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 93 |
புள்ளி | : 11 |
தனது தடத்தில் தடையேதும் இல்லாததால்
தங்குதடையின்றிச் சீராக ஓடும் நதியை விட
பாறைகளாலும் கற்களாலும் தடுக்கப்பட்டாலும்
அவற்றில் மோதி, கிழிந்து
வெள்ளை நூலிழைகள் வெளியே தெரிய
விரைந்தோடும் ஓடும் ஓடை அழகானது...
என் இதழிரண்டும் கவிபாட
இமைகளென்ற திரைச்சீலை மேல்நோக்கி எழுகிறது...
வெண்ணிற மேடைமீதிருந்த கரும்பாவையவள்
என் கவிதையை வியந்து பாராட்டி
‘தை தை’யெனச் சதிராடுகிறாள்...
உனக்காகக் காத்திருக்கையில்
எனை மறந்து
உன் நினைவில் மூழ்கிக்கிடப்பது
ஒரு வகை இன்பமென்றால்...
நீ வந்தபின்
மொத்தமாய் எனை
உனக்குள் மூழ்கடிக்கிறாயே...
அது இன்பத்திலும் இன்பமடி!!!
கவிகள் நிறைந்த காகிதத்தை பிழை அறிந்தது போல
பாசம் நிறைந்த குடும்பத்தை கசக்கி எறிந்துவிட்டேன்
உன் காதலால் !!!
பிரிவின் வேதனை உணர்கிறேன்
உன்னை நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்......
பிரிவின் வேதனை மறக்கிறேன்
வாழ நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்......
ஒவ்வொரு காதலும் ஒரு சாதனை
நம் காதல் ....ஒரு சிறு வேதனை.........
உன் நிழல் பட்டாலே
நிதானம் இழப்பேன்...
உன் ஸ்பரிசம் பட்டது
நான் என்னையே இழந்தேன்...
நண்பர் நானத்தின் 'தாடி' கவிதை படித்தேன், நன்று...
ஆயினும், என் பார்வையில்...'தாடி'
காதலென்ற செடிகளை நட்டு
பூப்பூத்ததைப் பார்த்து மகிழ்ந்தவள்
இன்று பாரா முகங்காட்டி பறந்துபோனாள்...
கவனிப்பார் யாருமில்லா காரணத்தால்
பூச்செடியைச் சூழ்ந்து மண்டிக்கிடக்கும் களைகள் - தாடிகள்!
அவள் என் மனதில் விதைத்த
விதைகளின் பலனாக
என் முகத்தில் முளைத்த
சிறுச் செடிகள் " தாடிகள் "
படித்ததில் பிடித்தது.!
சகோதரியை பலாத்காரம் செய்தவர்களைக் கொன்று பழி வாங்கிய புரூஸ்லி,பதினான்கு வருடங்கள் கழித்து போன மாதம்தான் விடுதலையானார்.
உப்பு காரத்தைத் தவிர்த்துவிடுகிறார்.உடற்பயிற்சிகளில் சிறந்தது நடைப் பயிற்சியே என்கிறார்.முன்போல உணர்ச்சி வசப்படுவதில்லை.சாதுவாக நடந்து கொள்கிறார்.பிரச்சினைகளை நிதானமாகக் கையாள்கிறார்.தூங்கும் புத்தனை வணங்கி வருகிறார்.அண்ணன் மகளுக்கு நிஞ்சாக் கட்டைகளில் கயிற்றை இணைத்து,ஸ்கிப்பிங் விளையாடக் கொடுத்துவிட்டார். டீ ஷர்ட்டுகளை அணிவதில்லை.முழுக்கை ஜிப்பா மட் (...)
பொறாமை!
‘இயலாமை’ என்ற ஆமைக்குப் பிறந்தவன்தான்
இந்தப் பொறாமையென்ற கொடியவன்...
எப்படி?
இயலாமைதானே பொறாமையின் பிறப்பிடம்...
பொறாமையின் ஜனனம்
இயலாமையுடையவனுக்கு மரணம்...
பொறாமை...
இதில் ‘ஆமை’ என்றிருப்பதாலோ என்னவோ...
ஆமையைப்போலவே
இது மெல்ல மெல்லக் கொல்கிறது...
பொறாமை!
‘இயலாமை’ என்ற ஆமைக்குப் பிறந்தவன்தான்
இந்தப் பொறாமையென்ற கொடியவன்...
எப்படி?
இயலாமைதானே பொறாமையின் பிறப்பிடம்...
பொறாமையின் ஜனனம்
இயலாமையுடையவனுக்கு மரணம்...
பொறாமை...
இதில் ‘ஆமை’ என்றிருப்பதாலோ என்னவோ...
ஆமையைப்போலவே
இது மெல்ல மெல்லக் கொல்கிறது...