தாடி
நண்பர் நானத்தின் 'தாடி' கவிதை படித்தேன், நன்று...
ஆயினும், என் பார்வையில்...'தாடி'
காதலென்ற செடிகளை நட்டு
பூப்பூத்ததைப் பார்த்து மகிழ்ந்தவள்
இன்று பாரா முகங்காட்டி பறந்துபோனாள்...
கவனிப்பார் யாருமில்லா காரணத்தால்
பூச்செடியைச் சூழ்ந்து மண்டிக்கிடக்கும் களைகள் - தாடிகள்!