என் மண்ணிலே --அவளுடன்

சோதனையில் நம் வாழ்க்கை நாளும் ............
தேடிக் கிடைத்தப் பொருளைஎல்லாம்
பகிர்ந்து உண்ட காலம் எல்லாம்
பறந்து ஓடி மறைந்துவிட்டது........
பாவை அழகை ரசித்து ரசித்து
காலம் இங்கு கழியுது ..........அன்று
காலை நேர சூரியனும்
கடிகாரம் ஆனது ...........
சோம்பித் திரிந்து வாழ்ந்த நாட்கள்
சோகமாகிப் போனது ...................
நிலவொளியின் வெளிச்சம் பார்க்க
மனம் ஏனோ தேடுது .........
அன்று அமாவாசை --என்று
அறிந்த பின்பு அமைதியாகிப் போனது .........
தமிழ் மாதம் எல்லாம் மறந்து போனது ...........
ஆங்கிலமே இங்கு தலைவிரித்து ஆடுது ..........
சேர்ந்து வாழ்ந்த காலம் எல்லாம்
தவிடுபொடியானது ..........அங்கு
ஆளுக்கொரு வீட்டிலே
அமைதியைத் தேடியே .............
பழகிய முகங்கள் எல்லாம்
பார்க்க மட்டும் செய்யுது ..............
சிரித்துப் பேசி வாழ்ந்த நாட்கள் --இங்கு
சிந்தனையிலே பேசுது .....
கல்லூரிக் கால்லாம் எல்லாம்
கனவிலே வருகுது ...........
பூமியெங்கும் புன்னகையில் ....அன்று
புரியவில்லை --அவள்
பார்வை மட்டும் ........
பிறந்து வளர்ந்த என் மண்ணிலே
அவளும் வளர்ந்தது தான் ஆச்சரியம் .......
எவ்வளவோ தூரம் பிரிந்து சென்று விட்டேன்
அவள் பார்வை மட்டும்--என்
கண்ணை விட்டு நீங்கவில்லை.........

எழுதியவர் : ஜேம்ஸ் (23-Sep-14, 4:49 pm)
Tanglish : man vaasam
பார்வை : 137

மேலே