ஆகாய சமர் களம்

வைகறைப் பொழுதில் கனன்றெழுந்த கதிரவன்
தீச்சுடர் கணைகளால் விண்மீன் படைகள் மடிந்திடும்
கீழ் வானமே செங்குருதியாக ஆகாயம் ஒரு சமர் களமாக
அந்தி பொழுதில் சூழும் களிரன்ன கார் முகில் படைகள்
பொழிந்திடும் மழை கனிகளில் அணைந்திடும் தீக்கணைகள்
பகலவன் மேகங்களில் சிறை பட்டு மலைபுரத்தே வீழ்ந்தனன்
காலம் மறுபடி சுழலும் , மீண்டும் ஒரு உதயம் வரும்
வெற்றியும் தோல்வியும் காலத்தின் கோலமன்றோ .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (24-Sep-14, 1:59 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
பார்வை : 74

மேலே