சிரிப்புத் தேடி அழுதிருங்கள்

சிரிப்புத் தேடி அழுதிருங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஊருணியைச் செப்பனிட
உதவாது அரசாங்கம்,
உரிமையோடு வாருங்கள்
ஒன்றுபட்டுத் தூரெடுப்போம் !

என்சட்டை கிழிந்துவிட்டால்
என்கைகள் ஊசிதேடும்.
இடது கை வெட்டுண்டால்
அடுத்த கை மருந்தெடுக்கும்.

என் தோட்டம் அழகுபெற
என் கைகள் நீரிறைக்க,
என் வளத்தைச் சீரமைக்க
எவனை நான் எதிர்பார்க்க ?

பால்குடங்கள் தேவையில்லை
படையலிட்டுப் பயனில்லை
வான் மேகம் வற்றியது
வறண்டு போன மானுடத்தால் ...

எழுதியவர் : மீ.மணிகண்டன் (24-Sep-14, 12:32 pm)
பார்வை : 105

மேலே