தென்றலும் புயலும்

தோல்வி எனும் புயலடித்தால்
வாழ்வில் சில பூ உதிரும்!
வெற்றி எனும் தென்றல் வந்து
மீண்டும் அதை பூக்க வைக்கும்!

சில பூக்கள் உதிர்ந்தால் என்ன?
கலங்காதே நண்பா!
புயல் இங்கு வந்தாலும்
மறுநாளே அடங்கி விடும்
தென்றல் உன்னை தொட்டாலே
நெஞ்சில் மகிழ்ச்சி பூப்பூக்கும்

புயலே வந்தாலும்
துணிந்து எதிர்கொள்
தென்றல் உன்னை தொட்டாலே
மயங்காமல் மகிழ்ச்சிகொள்

சூழ்ந்து வந்த புயலினால்
அவமான தூசி படரும்
தூசி தட்டி சென்று விடு!
வெற்றி கொடி நட்டு விடு!

வெற்றியெனும் தென்றல் இங்கு
மாறி மாறி வீசுமடா!
அது உன்னை தொட்ட போதுமட்டும்
உலகம் உன்னை பேசுமடா!

அந்த பேச்சில் மயங்கிடாதே!
கர்வதினில் கரைந்திடாதே!
உச்சிக்கால வெயிலினிலே
தென்றல் காற்று வீசிடாது!
வெற்றியிலே வரும் கர்வம்
உன்னை கரை சேர்த்திடாது!

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (24-Sep-14, 4:40 pm)
சேர்த்தது : madasamy11
Tanglish : thendralum puyalum
பார்வை : 1028

மேலே