மனமே

நில்லா மனமே நிலையில்லா வன்மனமே
பொல்லாத ஆசைகள் போக்கிடுவாய் - தொல்லைகள்
நீங்கியே என்றென்றும் நிம்மதி தங்கிட
தீங்கே நினையா திரு .

பெற்றமனம் பித்துதான் பிள்ளைமனம் கல்லேதான்
உற்றவனே யானாலும் உண்மையிதே - பற்றின்றி
வாழ்ந்தால் பிரிவும் வருத்தாதே , இன்றிலோ
பாழ்மனம் நொந்திடும் பார் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Sep-14, 12:38 am)
பார்வை : 246

மேலே