தலை முறைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு பூக்கதை...
உள்ளாடை தவிர்த்து
எல்லாம்
பொதுவாகியிருந்தது
அந்த அறைக்குள்..
ஊர் பொதுவானதின்
காரணத்தால்....!!
பூரித்தட்டு... புதுச்சட்டை
எதுவுமென.. புகையும்
சேர்ந்துகொள்ளும்
அக்கணக்கில்...!!
தாலிபூட்டும் நிகழ்விற்கு
அழைத்திருந்தான் " ஒருவர்"....
அழைக்கப்
பட்டிருந்தான் "ஒருவன்".......
அடுத்த வரி
மேடைகளுக்கு முன்னதாக
"ர்" க்கும் ...." ன் " க்கும்
நடுவில்
பயணப்படுவது " டா "...க்களாக
இருக்கும்...!!
நாளன்றின்
புகைப்படத்திற்கு
சிரித்தபடி... அருகருகே ..
இரு " டா " க்களும்...!!
அதெப்படி " ன் " ல்லாம்
மேடையில்..?
பழக்கம் உடைக்கப்
பாக்குறீயளோ..?
சிவந்தெழுந்திருந்தது " டம்"....
"ர் " சூழ்நிலைக்கு
அழுதான்...
"ன் " சூழலுக்கு
பிரிந்தான்...!!
"தி " புகட்டி
வென்றிருந்தது " டம் "....
கோரப்பாதங்களின்
பித்தவெடிப்பில் நசுங்கிச்
சிதைந்திருந்தது.... " பூ "...........!!