சுவாசத்தில் வாசம்

பஞ்சு விரல்களின்
பிஞ்சுப் பருவம் ...
தத்தித்தத்தி நடக்கும்
தளிர் பருவம் ...
"ம்மா" என மட்டுமே
அழைக்கத் தெரிந்த
மழலைப் பருவம் ...
தாய்ப்பால் சுவை மட்டுமே
கண்ட பச்சைப் பருவம்...
உறக்கத்திலும் முறுவலிக்கும்
உன்னதப் பருவம்...
சோகமே அறியா
இளம் குருத்துப் பருவம்...
எனக்கு .... வேண்டும்.
ஆம்......................
மீண்டும் ஒரு
இரத்தக் குளியல் வேண்டும்....
பச்சைக் குழந்தையாக
கருவறையின் வாசத்தில்...
அன்னை உன் சுவாசத்தில்...

எழுதியவர் : கவிராஜா (26-Sep-14, 12:50 am)
சேர்த்தது : ராஜா முருகன்
Tanglish : swasathil vaasam
பார்வை : 147

மேலே