ஏணிப்படி ஏனிப்படி

..."" ஏணிப்படி??? ஏனிப்படி!!! ""...

ஏற்றங்கள் மட்டுமே வாழ்வன்று
இறக்கமும் அதிலே இருப்பதுண்டு
உனை மிதித்தாலும் நீ வெறுக்காது
பொறுமைக்கு பெருமை சேர்த்தே
இருக்கும்மிடம் இருந்துகொண்டு
பிறரை உயர்த்தவும் தாழ்த்தவும்
உன்னால் மட்டுமே முடிந்திடும்
வழிதனை காட்டிட வலிமறந்தாய்
உயர்த்திவிட உவகைகொண்டாய்
மரத்தாலான ஏணிப்படியைவிட
உயிர்மூச்சினை உனக்காய் தந்த
மனத்தாலான பந்தத்தின்படிகளே
அதிகமாயிங்கு பாதிக்கப்படுகிறது
இதனை எண்ணிவிட மறுப்பவரோ
உன்னை எட்டியே உதைத்திடுவார்
வழித்தடம் மறாவார் மதித்திடுவர்
எதுவாகினும் அது எப்படியாகினும்
உதவிடும் உள்ளத்தை மாற்றாதே
ஏனிப்படி இவரென்று எண்ணாதே
ஏணிப்படிகளே உன் கடமைசெய்,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (27-Sep-14, 2:22 pm)
பார்வை : 312

மேலே