உன்னை நினைத்து ஏங்கி உருகும் என் இதயம் 555

உயிரே...

என் வீட்டு தோட்டத்தில்
எத்தனை காகிதங்கள்...

தற்கொலை செய்து
கொண்டன...

என் காதலை உன்னிடம்
சொல்லும் முயற்சியில்...

உன் நினைவு தீயில் பனியாய்
உருகுகிறேனடி தினம்...

இன்னும் உன் மௌனம்
நீடித்தால்...

உன் வீட்டு புறாவை
அனுப்புடி...

எனக்கு தூதாக அல்ல
என்னை தூக்கி செல்ல...

உன் மௌனத்தால்
கொலையும் செய்கிறாய்...

உன் புன்னகையால்
மருத்துவமும் பார்க்கிறாய்...

உன்னை நினைத்து
ஏங்கி உருகும்...

என் இதயத்துக்கு
மருத்துவம் போதுமடி...

என் வாழ்விற்கு
உன் புன்னகையோடு...

ஒரு வார்த்தை சொல்லடி...

போதுமடி எனக்கு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Sep-14, 8:28 pm)
பார்வை : 587

மேலே