கேள்

(இது நான் எழுதிய ஆங்கில கவிதையின் தமிழாக்கம்)

ஓ! என் அன்பே கேள்
என்னுரை பாதியை அல்ல
உன் விருப்பம் மட்டுமல்ல
முழுதும் கேள் நின்
குறை படலம் முன்

கேள்!
அமைதி கற்றுத் தரும்
சூழல் ஒலிகளை
பறவையின் கீச்சை
அதனுள் இசையை

உன்னையே நீ கேள்
பிறர் உனை கேட்பதை கேள்
பிறர் பேசும்போது கேள் - நீ
பேசும் முன் முழுதும் கேள்

வார்த்தைகள் மோதல் இரைச்சல்
தெரித்தே அடங்கும் அதிர்வலைகள்
அர்த்த மற்றவை அனைத்தும்
உதிர் உன் சொல்லை சிந்தித்து
====================================

(ஆங்கில கவிதை இதோ.......)

Listen!

Oh! my dear listen
Not what half I said
Not what you want
The whole thing
Before holes you punch

Listen!

The silence teaches
The sounds around
Twittering birds and
The music within

Hear to your own self
Hear others hearing you
Hear when others speak
Hear fully before you speak

Clash of voice is noise
Splash and a ripple
Makes no sense ever
Mind your words before spelt
================================

எழுதியவர் : முரளி (28-Sep-14, 10:01 am)
பார்வை : 142

மேலே