வியர்வை விதைகள் --- அரவிந்த் C
விதையோடு மோத மறுத்தால்
விருட்சங்கள் கிடையாது...
உளியோடு மோத மறுத்தால்
சிற்பங்கள் கிடையாது...
மனதோடு மோத மறுத்தால்
நீ மனிதன் கிடையாது...
தினம் தினம் போராடு
உனக்குள்ளே...
உன்னை உன்னுடனே
ஒப்பிட்டுக்கொள்...!
உன் வெற்றிக்கு ஊக்கப்படுத்தும்
ஊக்க சக்தியும் நீயே...
உன்னை வெற்றிக்கு அழைத்து செல்லும்
ஆக்க சக்தியும் நீயே...
நீ வெல்ல வேண்டியது
பிறரை அல்ல
உன்னை தான்...
வாழ்க்கை போர்க்களத்தில்
போராளியும் நீயே
எதிராளியும் நீயே...
"கற்றுக் கொள்வதில்
கூச்சம் கொள்ளாதே..
கற்றதை எண்ணி
கர்வம் கொள்ளாதே..."
வெற்றியை ஈட்டும் வரை
உறங்காதே...
வெற்றியை ஈட்டிய பின்
உறங்குவதை பற்றி எண்ணாதே...
நாளைய வாழ்வை
உன் இன்றைய வேர்வையில்
விதைத்திடு...
தோல்வியின் முன்னுரையும் நீயே
வெற்றியின் முடிவுரையும் நீயே...
வரலாற்று பக்கங்கள்
நிரப்பப்படாமல் காத்துக்கிடக்கிறது..
உன் பெயரை பதிக்க...
சரித்திரத்தில் ஒரு இடம் வேண்டுமா
இல்லை
சத்திரத்தில் ஒரு இடம் வேண்டுமா....