கனவிலே வந்தவன்
கனவிலே வந்தவன் கனவோடு செல்வானோ ?
காயங்கள் பல தந்து கருத்திலே நிற்பானோ?
வேண்டமேனச்சொன்னால் வராதிருபானோ ?
கவிதைகள் பல எழுதச் செய்து வேடிக்கை காண்பானோ ?
தா என்றாலும் தராது சிரிப்பானே !
பெறு என்றாலும் வாங்காது கொல்வானே !
தொலைந்துப் போ என்றாலும் முன் வந்து நிற்பானே !
தன் தவறில்லை எனக் கூறி என்னுயிர் எடுப்பானே !