காந்தி வழியில் கரை சேவை

68 ஆண்டு கால சுதந்திரம்
நேற்றைய(27/09/2014) அறை பொழுதில்
தெரிந்தது

இங்கின்னும் சர்வதிகாரம் தான் நடக்கிறது
இருந்து இடை இடையே சுதந்திர
தினங்களும் வந்து செல்கின்றன

ஊழல் வழக்கில் உள்ளே போனவருக்கு
கலி உருண்டையாவது கிடைத்தது
வாக்களித்ததை தவிர தப்பு ஏதும்
செய்யாத சமூகத்திற்கு காத்திருப்பை
தவிர வேறு என்ன கிடைத்தது?

தங்க தாரகையானல் என்ன
தரணி ஆண்டவரானல் என்ன
தண்டனை வந்தால் தாங்க தானே வேண்டும்

தப்பை திருந்த செய்திருந்தால்
இன்று வருந்த தேவையில்லை

முடிமகளுக்கு முன் ஜாமின் கிடைக்காதற்கு
குடிமக்களுக்கு குந்தம் விளைவிக்கும்
குரங்கு கூட்டமே
இது தான் காந்தி வழியில் நீங்கள்
ஆற்றும் கரை சேவையா?

தேவை இல்லை உங்கள்
சேவை என்ற நிலைக்கு
வந்துவிட்டோம்

நூறாண்டு போற்றும் ஓராண்டு சாதனை
பேசியவர்களே பல்லாயிரம் ஆண்டு பேசும்
பதினெட்டு ஆண்டு சாதனைக்கு பரிட்சை
முடிவு வந்து விட்டது
பதுங்குவதை விட்டு
பாமர்களின் சுதந்திரத்தை பறிப்பது
என்ன நியாயம்?

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (28-Sep-14, 3:53 pm)
பார்வை : 117

மேலே