நான் என்ன பாவம் செய்தேன்
எனக்கென்ன சம்பந்தம்
சாமி கேட்டத என்னை பலி கொடு என்று என்னை
கொடுத்தல் சாமி வரம்தான் தருமா
நான் கேட்டேனா எனக்கு விடைகொடு என்று
என் தலை குலுக்க தலை எடுத்தல் சாமி சுகம் தருமா
மஞ்சள் நீர் ஊற்றி உடலெல்லாம் நடுங்க நானும் நடுங்கினேன்
அதற்க்கு பெயர் என்னை கொள்ள நானே உத்தரவு கொடுத்தேனாம்
மனித மந்தைகள் சொல்கிறது
என் இன நண்பனை எனக்கெதிராக திருப்பி விட்டு
முட்டு முட்டு என உசுப்பேற்றி நீங்கள் குளிர் காய
நாங்களென்ன கொள்ளிக்கடைகள ?
எவளுக்கோ எவனுக்கோ காது குத்த
எந்த குத்தமும் செய்யாத என்னை வலுக்கட்டாயமாக
இழுத்து வந்து வெட்டி போடுவது என்ன நியாயம்....
நான் வளர்ந்தால் நல்ல கறி
என வெட்டதான் போகிறீர்
நான் இளைத்து இறந்தாலும் தின்னத்தான் போகிறீர்
என்ன ஜென்மமோ
உங்கள் தேவைக்கு எங்களை கொன்று விட்டு
தின்றது மட்டுமல்லாமல்
ஆடு வளக்குறது அழகு பக்க இல்ல அருக்கதானு வசனம் வேறு .....