மௌனம் சம்மதித்தது
மௌனம் சம்மதித்தது..
நான் மனம் தந்தும்
மௌனத்தையே தந்தவள்
இன்று மனதை தந்துவிட்டால்..
என் காதலை ஏற்று
என் மனம்பிடித்தவள்
என் கைபிடிக்கவேண்டுமாம்
அவள் அப்பா சம்மதத்தோடு
அவளின் தூரப்பார்வையில்
நான் அவளுக்கானவன்
என்று தோன்றியதாம்..
எங்கள் முதல் சந்திப்பு
அவள் அம்மா அனுமதியோடு
மாலைநேரத்தில் நடந்தேறியது
சிவன் கோவிலில்..
நான் காதலை நேர்முகமாய் சொல்ல
ஆனந்தமாய் பதிலளித்தால்..
வெட்கத்தில் விடை தந்தவலை
அழைக்க..
அவள் என்னவென்று தலையசைக்க
``நான் உன்ன நல்லா பாத்துக்குவேன்``
என்று என் இதயம் தொட்டு சொன்னதும்
சரியென்று தலையசைத்தால்..
இந்த உலகமே வசப்பட்டுவிட்டதாய்
உணர்ந்தேன்..
என் காதலை அவள் ஏற்றதும்..!
(கவிதையாய் இதை எழுதவில்லை.. என் காதல் வெற்றிபெற்றதை என் எழுத்து நண்பர்களுக்கு சுருக்கமாக தெரிவிக்கவே கூறினேன்..நீண்ட நாட்கள் எழுத்து பக்கத்தில் நான் வராததற்கு காதலே காரணம் இருப்பினும் மகிழ்ச்சியான முடிவில்.. என் வாழ்க்கை ஆரம்பமாகிறது)