கவலையறியா காதல் - இராஜ்குமார்

கவலையறியா காதல்
=====================

விழியின் ஒளியில்
இருள் தெரிவதில்லை
இருளின் பாதையில்
விழிகளே தெரிவதில்லை

வரியின் கற்பனையில்
உண்மை தெரிவதில்லை
உண்மை உரைப்பதில்
கற்பனையே தெரிவதில்லை

கவலையின் கண்ணீரில்
காதல் தெரிவதில்லை
காதலின் தோல்வியில்
கவலையே தெரிவதில்லை

- இராஜ்குமார்

நாள் : 10 - 10 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (29-Sep-14, 1:33 pm)
பார்வை : 119

மேலே