வானும் நிலவும்
உன்னை சந்திக்கும் முன்வரை
நிலவும் வானும் மிக அழகாகத் தோன்றியது,
உன்னை கண்ட நாள் முதல்
நீ மட்டுமே அழகாக தெரிந்தாய்
என்கண்களுக்கு.
நீ இல்லாத இந்த இரவில்
வானும் நிலவும் நட்சத்திரங்களும்
எனக்கு அழகாக தெரியவில்லை,
அன்றில் இருந்து இன்றுவரை
அதே வானம் அதே நிலவு தான்,
நீ மட்டுமே புதுமை.