மதிப்பை உயர்த்திய மங்கள்யான்

அறிவியலர்களின் அற்புதப் படைப்பு - உலக
அதிசயத்தில் இந்தியரின் சொந்த உழைப்பு.
மங்கள்யான் விண்கலம் சென்றது விண்ணில் - இந்தியரின்
மகிமையை நிலைநிறுத்தியது செவ்வாய் மண்ணில்.
ஆன்மீக நெறியில் செல்வது மெஞ்ஞானம் - திறமையை
ஆற்றல் மூலம் செயலாக்கியது விஞ்ஞானம்.
கூட்டு முயற்சியில் ஒரு எந்திரம். - உலகையே
கூட்டுப் பார்வையில் ஈர்த்த மந்திரம்.
விஞ்ஞான மருத்துவர்களால் ஒரு பிறப்பு - அந்த
விண்ணை முட்டிப் பறந்தது அதனசிறப்பு.
சத்தியமாய் சாத்தியமாக்கியது மங்கள்யான் - இது
சாதனை சரித்திரத்தில் இந்தியரான எங்கள்யான்.
விவெளி ஆராய்ச்சிக் கூடமாம் இஸ்ரோ.- உலகமே
வியக்கத் தக்கவகையில் உருவாக்கியது மார்ஸ்ரோ
நவம்பர்-05-2013இல் மங்கள்யான் நிலைப் பெற்றது. - வேகமாய்
நடைப்போட்டு விண்ணில் பாய்ந்து சென்றது.
முன்னூறு நாட்கள் விண்ணில் மிதந்தது. - முழு
மூச்சாய் செப்டம்பர்-24-2014இல் இலக்கை அடைந்தது.
ஈடில்லா சிந்தனையின் செயலாக்க மதிப்பு - மங்கள்யான்
ஈடு இணையற்ற பெருமையாய் இந்திய மண்ணுக்குத் தந்த சாதிப்பு.
தொழில் நுட்பக் கோளாறுகள் இதிலில்லை.- இந்திய விஞ்ஞானிகளின்
தொடர் ஆய்வுக்கு தொய்வுகள் இனி எப்போதும் வருவதில்லை.
பிள்ளைப்பேறு பிரசவம் உண்டு பெண்ணுக்கு - உங்களால்
பெருமை வளரும் இந்த மண்ணுக்கு.
சாதிக்கப் பிறந்த இந்திய விஞ்ஞானிகளே - அந்த
சமுத்திரத்தில் அலைகள் ஓய்வதில்லை - உங்கள்
சாதனை என்றுமே அழிவதில்லை.

(இந்தக் கவிதை 24.09.2014 அன்றே உருவாக்கப்பட்டது. இணைய தளத்தில் இணைய தள இணைப்பு இல்லாததால் அன்றே இதனைப் பதிவு செய்ய இயலவில்லை.)(சு.சங்கு சுப்ரமணியன்)

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (2-Oct-14, 6:32 am)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 85

மேலே