ஆறறிவு மனிதா
குளிர்ந்த நீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கும்
ஆறறிவு மனிதா, அழுக்குத் தண்ணீரில்
ஆக்ஸ்சிஜன்எடுத்து அழகாய்வாழும் அயிரை
மீனுக்கு என்றும் நீ பெரியவன் இல்லை.
குட்டிவீட்டைக் கட்டிமுடிக்க எட்டுமாதம் எட்டு
பேர்வேலை பார்த்தும் பட்டி பார்க்காததால்
சுட்டிக்காட்ட முடியா நேர்த்தியும் பூர்த்தியும் அந்த
சிட்டுக்குருவியின் கூட்டுக்கு நிகராகுமோ ?