ஆயுத பூஜை

கல்வி பயின்று அறிவாளியாகிட
மாணவனுக்கு புத்தகங்கள் ஆயுதமே!!!

நல்லதையும் உள்ளதையும் வடித்திட
எழுத்தாளனுக்கு எழுதுகோல் ஆயுதமே!!!

கல்லையும் உருவாய் செதுக்கிட
சிற்பிக்கு கூரிய உளி ஆயுதமே!!!

பேசும் வண்ணம் சித்திரம் தீட்ட
ஓவியனுக்கு தூரிகை ஆயுதமே!!!

எதிரியை போராடி வெற்றி கொள்ள
போர்முனை வீரனுக்கு போர்க்கருவி ஆயுதமே!!!

பொருட்களை உற்பத்தி செய்திட
தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் ஆயுதமே!!!

தொழில்நுட்ப உலகத்தில் ஈடில்லா
இயந்திரமாய் எங்குமாய் கணினி ஆயுதமே!!!

அனைத்து பொருள் பின்னணியிலும்
ஏதோ ஒரு வடிவினில் இருப்பது ஆயுதமே!!!

வாழ்வின் இயக்கங்களுக்கு உறுதுணையாய்
பலவிதமாய் இருப்பதுவும் ஆயுதமே!!!

ஆயுதங்களோடு இணைந்த வாழ்வில்
மனிதன் வளர்ச்சியும் வசதியுமாய்!!!

கண்கண்ட தெய்வமாய் ஆயுதங்கள்
கைதொழும் தினமாய் இன்று
ஆயுத பூஜை வழிபாட்டினிலே
உழைப்பாளிகளாய் ஆனந்தம் கொள்வோம்!!!

ஆயுத பூஜை வாழ்த்துக்களுடன்,
சொ.சாந்தி.

எழுதியவர் : சொ.சாந்தி (2-Oct-14, 3:57 pm)
Tanglish : ayutha poojai
பார்வை : 4168

மேலே