உன்னத வியாபாரி

மெலிந்த உடம்பு
தள்ளாத வயது
தயராத ஆற்றல்
வலி குறைந்தாலும்
நேர்மையான வியாபாரம்
அன்பு பெருகி
வழங்கும் உள்ளம்
யாரும் போற்றவில்லை
ஆனால்
நான் நானாக
வாழ விரும்புகிறேன்
என்னுழைப்பில் விற்று
பிழைக்கிறேன்
கொடுப்பதே
ஞாயவிலை
பட்டினி தீர்க்க
பேரம் பேசினால்
என் செய்வேன்
தோட்டத்திலிருந்து
நேரே வந்தாலும்
திருப்தி இல்லை
குளிர் சாதன வசதி
செய்து
பெரிய மாடச் சந்தைக் காட்டில்
கேட்ட விலை
கொடுத்து எமாறுவீர்கள்
ஆனால்
உண்மை பாமர வியாபாரியை
என்று பேணிப்பீர்கள்
என்று போற்றுவீர்கள்
என்று உணர்வீர்கள்
அவர் கேட்ட விலை
என்று கொடுப்பீர்கள்
இறைவா நீ எங்கே
இருக்கிறாய்
நான் அறிய முடியவில்லையே
எங்கே செல்கிறோம்

எழுதியவர் : ரமணி (2-Oct-14, 2:48 pm)
Tanglish : unnatha viyaabaari
பார்வை : 530

மேலே