என்ன வாழ்கை இது
முயன்று பார்த்தேன்
முடியவில்லை...
முழுதும் தோற்றேன்
விடியலில்லை...
காலம் எனக்காய்
கனியவில்லை..
கடவுள் கூட
உதவவில்லை...
மனிதனாய்ப் பிறந்து
தொலைத்ததினால்
மனத்தினைக் கொன்று
பிழைத்ததினால்
யந்திரம் போலிங்கு
ஆகிவிட்டேன்...
தந்திடும் கூலிக்கு
மாரடித்தேன் ...
தன்னிலை மறந்து
வாழ்வதினும் ..
இந்நிலை தொடர்ந்து
வீழ்வதினும்...
சாதலே சுகமென
கண்டு கொண்டேன்...
ஆதலால் வாழ்கையை
நொந்து கொண்டேன்