கன்னியா சுல்கம்
பெண்:
பட்டும் படாமலும் பட்டென்று என்கருத்தை
சட்டென்று சொல்லத்தான் எண்ணுகிறேன் - முட்டு
இனிவேறு இல்லை எனதுகாதல் சொல்ல
தனியாக நான்வருவேன் பார்!
ஆண்:
வந்தாலும் வேறு கவலையில்லை ஆவலோடு
சொந்தமாக்க காத்திருப்பேன் உண்மையாக - எந்தனுடன்
இன்பமாக வாழ்ந்திடலாம் கன்னியா சுல்கமாய்
என்னுயிரைத் தந்திடுவேன் நம்பு!
பெண்:
சொத்துபத்து ஒன்றுமே தேவையில்லை சொந்தமென்ற
நித்திலம் ஒன்றுதான் போதுமே - நித்தநித்தம்
அன்புகொண்டு என்னையே போற்றிவர நானுனக்கு
என்றுமே இன்னுயிர் தான்!