கதம்ப பாக்கள் - சந்தோஷ்

சிறையில் மாட்டிய இரட்டை இலை.
மறைவில் ஒதுங்கும் உதயசூரியன்
காரணம்
தலையில் பூத்த தாமரை.
# ராஜதந்திரம்.
ஒருவரிடம் ஒரு வரியில்
எழுதகேட்டேன் கவிதை.
கேட்டார் லஞ்சம்.
காரணம்,
அவர் நம் தலைவிதி.
# அரசியல்வாதி.
ரோஜா தோட்டத்தில்
ராஜா உடையில் கவிஞர்.
இதழ்களை விரித்து
சிவப்பாய் புன்னகைத்தது
வாசகப்பூக்கள்.
# ரசனை.
ரயிலின் அதீதவேகத்தில்
ஜன்னல் இருக்கையில்
காணும் காட்சிகளெல்லாம்
என் கண்களில்
எழுதியது நீளக்கவிதை.
#காட்சிப்பிழை
-இரா.சந்தோஷ் குமார்