கட்டுமரக்கருப்பை-அக்னி ஓடத்தில் நீந்துகிறான் மீனவன்

)
கர்ப்பம் எரியும்
கங்குகளிலே,
கதிரவனைத் தின்னும்
மங்குகளிலே,
அக்னிஓட மொன்று
ஆடி ஆடிப்போகிறதே!
ஆலங்கட்டிகள்
அவிழ்ந்து வந்து
அம்மணமாய்
விழுவதேனோ!....
அரைவயிற்றுபிண்டமும்
ஆவியாய்
போவதேனோ?

கசாப்புக்கடல்
மேனிகளிலே,
உப்புகரிக்கும்
ஆடுகளிலே,
அணுகுண்டுபித்தன்
அம்மணமாய் ஏறி
அறிவிலியாய்
போவதேனோ?
கொப்பரை மண்டை
கொண்டு
கோவணம் தேடி
அலப்பரை கூட்டுவதேனோ!
கருமாதி வீட்டில்தான்
சமைந்தானோ?
கருமக்காரியம் மட்டும்
முடிப்பதேனோ!
பித்தன்!
இவனின்
தனங்களைகிள்ளிவிட்டு
காமத்தின் புயங்கள்
கடலிலும்
வெடிப்பதேனோ!

பாவி பாவி

அக்னிஓடம் அழுகிறதே
இருள் நெய்த
பிரேதச்சேலையில்,
பின்னிக்கொண்டு
கிடக்கும்
பிரசவக்கடல் தன்
பிள்ளையை
பெற்றுவிடுமா?
அதைக்கொண்டுபோய்
கரையில்
விட்டு விடுமா?

கட்டுமரக்கருப்பை சிவந்தும்,
அகப்பை,
கடல்முற்றம்
தொட்டு வருமா?
அடி வயிற்றில்
நெருப்பை கட்டியே
ஆவியை விட்டு
வருமா?
அழுகிறதே
அக்னிஓடம்....!!!
விளக்கேந்திய
வீதியிலே
விடியலின்பிரசவம்
வலியோடாவது
பிறந்திடுமே!!!
கடுக்கண் அளவும்
விளக்கே யில்லாத
இடுக்கண் வீதியில்
முடுக்கம் வரையிலும்
மோதிக்கொண்டே
பயணிக்கிறது அக்னி ஓடம்!

காட்டுமர
வேலிகள்,
சிட்டுக்குருவி
கூடுகள்,
கரையான்முட்டையை
பறித்துக்கொண்டு .போகும்
கட்டெறும்பின்
குறும்புகள்
கண்டதுண்டோ?

காட்டு வழியில்
காலையில்
கதிரவனை
தத்தெடுத்து
கானகம் கடந்து
போனதுண்டோ?
குடிசையில்
இரவில்
மகனுக்கு
நிலாச்சோறு
காட்டியதுண்டோ?
எங்கே
. . . . . . .
தோட்டாவின்
கூட்டணியில்
தோழனின் நகரம்!
துப்பாக்கியின்
மூளையில்
நடுங்கும் நரகம்!
.
ஓடை செல்லும்
வழியில்
கூழாங்கற்களின்
பயணமாய்...
சுனாமித்தேவனின்
சுருக்கொப்பத்தில்
கிடக்கும்
எழுத்துகளாய்
பயணிக்கிறது ஓடம்!
மீண்டு வருமா
காலம்
மீண்டும்வருமா?

எழுதியவர் : ருத்ரா-மறு பதிவு (4-Oct-14, 8:55 am)
பார்வை : 75

மேலே