மழையின் வருடல்

நான் வளர்ந்துவிட்டேன்
என்பது கூட மறந்து
இடி இடித்து மழை பெய்யுது
நீ உள்ள போ மா போ
என்று சொல்லிக் கொண்டு இருந்த அம்மாவை நினைத்து
கலங்கிய கண்களுடன்
சன்னல் ஓரமாய் நின்று
மழையை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என் மகளை அனைத்த படி.....

எழுதியவர் : மீனாட்சி கண்ணன் (4-Oct-14, 5:10 pm)
பார்வை : 64

மேலே